இந்தியா

ஆட்டோவுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை தொலைத்த சிறுமி.. பலாத்காரம் செய்த ஓட்டுநர்..! 

Summary:

ஆட்டோவுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை தொலைத்த சிறுமி.. பலாத்காரம் செய்த ஓட்டுநர்..! 

பயணத்தின் போது சிறுமி பணத்தை தவறவிட, விஷயத்தை புரிந்துகொண்ட ரிக்சா ஓட்டுநர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, ஹாதாப்சர் பகுதியில் நேபாளத்தை சார்ந்த 16 வயது சிறுமி ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்துள்ளார். இவர் தன்னுடன் எடுத்து வந்திருந்த பணத்தை எங்கேயோ தவறவிட்டதாக தெரியவருகிறது. இந்த விஷயம் ஆட்டோ ரிக்சா ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, அங்குள்ள தனிமையான பகுதியில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர், 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இந்த கொடூரம் நடந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமி விஷயம் தொடர்பாக ஹாதாப்சர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரிக்சா ஓட்டுனரை கைது செய்தனர். மேலும், சிறுமியின் புகாரில் கடந்த டிசம்பர் மாதம் தனது நண்பர்கள் 2 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த விஷயத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறுமியின் 2 நண்பர்களையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மொத்தமாக சிறுமியின் புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Advertisement