தாலிகட்டி 6 மாதமாக மனைவியுடன் நெருங்காத கணவன்.. போனில் பகீர் ஆடியோ.. பரபரப்பு புகார்..!! maharashtra-navi-mumbai-wife-complaint-husband-he-is-sa

தன்னைத் தொட்டு தாலிகட்டிய கணவன் முதலிரவில் இருந்து 6 மாதமாக மனைவியுடன் ஒன்று சேராத நிலையில், கணவனின் செல்போனை ஆய்வு செய்த மனைவிக்கு பேரதிர்ச்சி தகவல் காத்திருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பையை சேர்ந்த 29 வயது பெண்மணி திருமணம் செய்ய இணையவழி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். பெண்ணின் சுயவிபரத்தை கண்ட மணமகன் குடும்பத்தினர், கடந்த ஜூன் மாதம் பெண்ணை அணுகி மணமகன் குறித்த விபரங்களை அனுப்பி வைத்துள்ளனர். 

மணமகனின் சுய விபரங்கள் பெண்ணுக்கு பிடித்துப்போக, மணமகன் வீட்டாருக்கும் மணப்பெண்ணை பிடித்துப்போக இரு குடும்பத்தாரும் தம்பதிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும், தம்பதிகள் தங்களை புரிந்துகொள்ளும் வகையில் இருவரும் அவ்வப்போது பேசிக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

maharashtra

திருமணத்திற்கு பின்னர் முதலிரவு, தேனிலவு என ஜோடிகள் உற்சாகமாக இருப்பார்கள் என எண்ணினால், அங்கு பெண்ணுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கிட்டத்தட்ட திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகியும், கணவர் தனது மனைவியுடன் தாம்பத்தியம் மேற்கொள்ளவில்லை. இதனால் விரக்தியில் இருந்த பெண்மணி, எதற்ச்சையாக கணவரின் அலைபேசியை பார்த்துள்ளார். 

அப்போதுதான், மனைவிக்கு தனது கணவர் ஒரு ஓரினசேர்கையாளர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மேலும், கணவரின் அலைபேசியில் அது தொடர்பான பல ஆடியோ, வீடியோ பதிவுகளை பார்த்தும் கேட்டும் பதறிபோயுள்ளார். இதனையடுத்து, திருமணத்திற்கு முன்னரே விஷயத்தை தெரிவித்து இருந்தால், வேறு வரனாவது பார்த்திருப்பேனே என கொந்தளித்த மனைவி, காவல் நிலையத்தில் கணவரின் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.