இத செய்ய எப்படித்தான் மனசு வந்துச்சோ.... காம பேயாக மாறிய தாய் செய்த அதிர்ச்சி செயல்! சொந்த பேத்திகளையே யாருன்னே தெரியாதுன்னு சொன்ன தாத்தா..... அனாதையாக நின்ற 2 குழந்தைகள்...!!!
மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில், இரண்டு சிறு குழந்தைகளை அரசுப் பேருந்தில் தவிக்கவிட்டு தாய் ஒருவர் கள்ளக்காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், போலீசார் தொடர்பு கொண்டபோது குழந்தைகளின் சொந்தத் தாத்தாவே அவர்களை ஏற்க மறுத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த இரு குழந்தைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் குழந்தைகளை விட்டுவிட்டு தப்பிய தாய்
தகவலின்படி, பீடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் சில காலத்திற்கு முன்பு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால், தனது இரண்டு குழந்தைகளுடன் அவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
பின்னர் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர். இதற்காக அரசுப் பேருந்தில் ஏறிய அவர்கள், இடைப்பட்ட ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது குழந்தைகளை இருக்கையிலேயே அமரவைத்து விட்டு அமைதியாக இறங்கி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: வறுமையால் பிரிந்த காதல் தம்பதிகள்! கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்! பரபரப்பு சம்பவம் !!!
அழுத குழந்தைகள்... கண்டெடுத்த நடத்துனர்
நீண்ட நேரமாக தாய் திரும்பி வராததால் குழந்தைகள் பயத்தில் கதறி அழத் தொடங்கியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த நடத்துனர், அவர்களிடம் விசாரித்தபோது யாரும் உடன் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகளின் உடமைகளைச் சோதித்தபோது, ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், “இந்தக் குழந்தைகளுக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. தயவுசெய்து இவர்களை எவத்மால் செல்லும் பேருந்தில் ஏற்றி விடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், கீழே ஒரு மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக நடத்துனர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அரசுப் பேருந்தில் தவித்த குழந்தைகள் பாதுகாப்பாக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பேரக்குழந்தைகளையே மறுத்த தாத்தா
போலீசார் கடிதத்தில் இருந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது, அது குழந்தைகளின் தாத்தாவுடையது என்பது உறுதியானது. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
ஆனால், அங்கு வந்த முதியவர் “இவர்கள் யார் என தெரியாது. எனக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை” என கூறி குழந்தைகளை ஏற்க மறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
பெற்ற தாயும், சொந்தத் தாத்தாவும் கைவிட்ட நிலையில், அந்த இரு குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை தவிக்கவிட்டு தப்பிய பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.