விவசாயிகளுக்காகவே பா.ஜனதா கூட்டணியில் இணைந்தேன் : அஜீத் பவார் நெத்தியடி..!!

விவசாயிகளுக்காகவே பா.ஜனதா கூட்டணியில் இணைந்தேன் : அஜீத் பவார் நெத்தியடி..!!



Maharashtra Deputy Chief Minister Ajit Pawar has said that he joined BJP-Shiv Sena alliance for the development of farmers.

விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவே பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் இணைந்தேன் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் உறவினர் அஜீத் பவார் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் பிரிந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் சமீபத்தில் இணைந்தனர்.

இதன் பின்னர், அஜித் பவாருக்கு மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பதவியும், அவருடன் வந்த 8 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜீத் பவார் கூறியதாவது:-

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். எங்களது அரசு எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும். வயல்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் நடக்காது. நான் நமது மாநிலத்தில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது விவசாயிகளின் மேம்பாட்டுக்காக நிறைய செய்துள்ளேன் என்று அஜீத் பவார் கூறினார்.