40 அடி ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 5 வயது சிறுவன்... 7 மணிநேர போராட்டத்திற்கு பின் நடந்தது என்ன?.! பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்..!madhyapradesh boy accidentally slipped in Deep  well

40 அடி ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 5 வயது சிறுவனை, மீட்பு குழுவினர் ஏழு மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டம், நாராயண்புரா பதர்பூர் கிராமத்தில் திபேந்திர யாதவ் என்ற ஐந்து வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், திடீரென ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போன்ற அதிகாரிகள் சிறுவனை மீட்க பல முயற்சிகளையும் செய்துள்ளனர்.

ஆனால் 40 அடி ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த சிறுவனை மீட்பதில் சிக்கல்கள் இருந்ததால், ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக 7 மணி நேர கடும் போராட்டத்திற்கு பின், சிறுவனை உயிருடன் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இதனை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.