இந்தியா

குழந்தையை இரையாக்க தாய் முன்னே தூக்கி சென்ற சிறுத்தை.. தீரத்துடன் போராடி மகனை காப்பாற்றிய வீரத்தாய்..!

Summary:

தனது குழந்தையை காப்பாற்ற தாய் சிறுத்தையுடன் வீரமாக சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

தனது குழந்தையை காப்பாற்ற தாய் சிறுத்தையுடன் வீரமாக சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டம், சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே உள்ளது பைகா ஆதிவாசி பழங்குடி சமூக கிராமம். இந்த கிராமத்தை சார்ந்த பெண்மணி கிரண் பைகா. இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில், தனது குழந்தைகளுடன் வீட்டு முன்வாசலில் அமர்ந்து, குளிருக்கு தீவைத்துவிட்டு இருந்துள்ளார். 

இதன்போது, கிரண் பைகாவின் 8 வயது குழந்தை ராகுலை சிறுத்தை வாயில் கவ்வி தூக்கி சென்றுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிரண் பைகா, தனது குழந்தையை காப்பாற்றும் பொருட்டு காட்டுக்குள் ஒரு கி.மீ தூரம் சிறுத்தையை துரத்தி சென்று, சிறுத்தையை தாக்கி குழந்தையை காப்பாற்றி இருக்கிறார். 

குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தையின் கொடூரத்தால் குழந்தையின் கண்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், குழந்தையை காப்பாற்ற சென்ற தாயையும் சிறுத்தை தாக்கியுள்ளது. குழந்தையை சிறுத்தை தூக்கி சென்ற தகவல் ஊர் மக்களுக்கு தெரியவரவே, அனைவரும் போர்படையென திரண்டு வந்துள்ளனர். 

இதனைகவனித்த சிறுத்தையோ அங்கிருந்து சென்றுவிட, தாக்குதலில் காயமடைந்த குழந்தை மற்றும் தாய் அங்கேயே மயக்க நிலையில் இருந்துள்ளார். அவர்களை மீட்ட ஊர் மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement