பாதாம் பருப்பை எடுத்த பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் : மரத்தில் கட்டிவைத்து கோவில் அர்ச்சகர் வெறிச்செயல்..!

பாதாம் பருப்பை எடுத்த பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் : மரத்தில் கட்டிவைத்து கோவில் அர்ச்சகர் வெறிச்செயல்..!


madhya-pradesh-child-attacked-by-temple-preacher

கோவிலில் இருந்த பாதாம் பருப்பை எடுத்த சிறுவனை மரத்தில் கட்டிவைத்து கோவில் அர்ச்சகர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் பகுதியில் ஜெயின் கோவில் உள்ளது. இக்கோவிலில் அர்ச்சகர் சிறுவனை ஒருவனை மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கதறிய நிலையிலும் கேட்டபாடில்லை. 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, வீடியோ காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. விசாரணை நடத்திய காவல் துறையினர் கோவில் அர்ச்சகரை கைது செய்தனர். 

அதாவது, பட்டியலினத்தை சேர்ந்த சிறுவன் கோவில் பூஜைத்தட்டில் இருக்கும் பாதாம் பருப்பை எடுத்துள்ளான். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த அர்ச்சகர் சிறுவனை மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளார் என்பது உறுதியானது. தற்போது அர்ச்சகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.