ஒரேநாளில் கோடி வருமானம்.. செங்கல்சூளை வியாபாரிக்கு ஜாக்பாட் அதிஷ்டம்.. கிடைத்த வைரம்.!

ஒரேநாளில் கோடி வருமானம்.. செங்கல்சூளை வியாபாரிக்கு ஜாக்பாட் அதிஷ்டம்.. கிடைத்த வைரம்.!


Madhya Pradesh Bricks Manufacture Discovered Dimond

ஒருகோடி மதிப்பிலான வைரம் செங்கல் சூளை வியாபாரிக்கு கிடைத்து, அவர் செல்வந்தராக அதிஷ்டம் உதவி செய்துள்ளது. 

நமது வாழ்க்கையில் அதிஷ்டம், அற்புதம் நடக்குமா? என்று கேட்டால் அது அனைவருக்கும் நடக்காது என்பது தான் பதிலாக இருக்கும். சிலர் அவர்களின் அதிஷ்டத்தால் ஒரே நாள் இரவில் கோடிகளில் புரண்டும் வருகின்றனர். அத்தகைய ஒரு ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்ணா மாவட்டத்தை சேர்ந்த செங்கல் சூளை வியாபாரி சுஷில் சுக்லா. இவர் கடந்த 20 வருடமாக செங்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இவர் சமீபத்தில் கிருஷ்ண கல்யாண்பூர் அருகே ஆழமற்ற சுரங்கம் தோண்டியுள்ளனர். 

Madhya pradesh

அப்போது, அவருக்கு 26.11 காரட் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1 கோடிக்கும் அதிகம் ஆகும். இதில், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி போன்றவை கழிந்து, சுக்லாவுக்கு ரூ.1.20 கோடி கையில் கிடைக்கும்.