ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
மூன்று நாள்.. 106 கி.மீ சைக்கிள் பயணம்.. மகனின் தேர்வுக்காக தந்தை செய்த ஹீரோயிசம்.!
மூன்று நாள்.. 106 கி.மீ சைக்கிள் பயணம்.. மகனின் தேர்வுக்காக தந்தை செய்த ஹீரோயிசம்.!

மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டம் மனவார் தேசில் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சோபாராம். இவர் தினக்கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவரது மூத்த மகன் அசீஸ் பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தேல்வியடைந்தார்.
அதனை அடுத்து மீண்டும் மறுதேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் தேர்வு மையமானது சொந்த ஊரிலிருந்து 106 கி.மீ தொலைவில் இருந்துள்ளது. ஆனால் மகன் தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்த சோபாராம் போக்குவரத்து வசதியில்லாததால் சைக்கிளில் தனது பயணத்தை மேற்கொண்டார்.
அதன்படி திங்கட்கிழமை மாலை தொடங்கி அடுத்த நாள் தார் மாவட்டத்தை சென்றடைந்தார். புதன்கிழமை மகனின் தேர்வு முடித்து விட்டு வெளியே வந்த தந்தை, மகனுக்கு ஒரு ஆர்ச்சயம் காத்திருந்தது. தந்தையையும், மகனையும் வரவேற்க அரசு அதிகாரிகள் காத்திருந்தனர்.
அதிகாரிகள் சோபாராமுக்கு உணவு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி திரும்பி ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதியையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.