நடுரோட்டில் வந்த சிறுத்தை! கண்ணிமைக்கும் நொடியில் லாரி கிளீனருக்கு நேர்ந்த அதிசயம்!Lorry cleaner escape from cheetah in hydrabad

ஹைதராபாத்தில் முக்கிய சாலை ஒன்றில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அதன் கீழே டிரைவர் மற்றும் கிளினர் நின்றுகொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது அங்கு எதிர்பாராதவிதமாக சிறுத்தை ஒன்று வந்துள்ளது. அதனை கண்டதும் இருவரும் தெறித்து ஓடியுள்ளனர். பின்னர் அப்பொழுது சாதுர்த்தியமாக டிரைவர் லாரிக்குள் ஏறிவிடுகிறார். கிளீனர் அங்குமிங்கும் ஓடி இறுதியில் லாரிக்குள் ஏற முயற்சி செய்கிறார்.

அப்பொழுது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை அவரது காலை பிடித்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் சிறுத்தையை தள்ளிவிட்டு லாரியில் ஏறியுள்ளார். 

பின்னர் சிறுத்தை அருகில் இருந்த  பூட்டிய கடை ஒன்றின் மீது ஏற முடியாமல் திணறுகிறது. அப்பொழுது அங்கிருந்த நாய்கள் சிறுத்தையை துரத்த சிறுத்தை அங்கிருந்து தப்பி செல்கிறது. இதன் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.