
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள்..! தாறுமாறாக வந்து ஏறிய லாரி.! 3 பேர் பரிதாப பலி.!
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வந்த லாரி ஒன்று தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியது.
இதில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி பதிவு எண்ணைப் பயன்படுத்தி உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் இந்த சம்பவம் குறித்தும், ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement