இந்தியா லைப் ஸ்டைல்

ஆஹா..! சிங்கத்துக்கு இப்படி ஒரு மனசா!! வாத்துடன் விளையாடும் சிங்கம்!! வைரல் வீடியோ..

Summary:

முரட்டு சிங்கம் ஒன்று வாத்துடன் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

முரட்டு சிங்கம் ஒன்று வாத்துடன் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ள 14 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றில், சிங்கம் ஒன்று குளத்தின் அருகே நடந்து செல்கிறது. அப்போது அந்த குளத்திற்குள் இருக்கும் வாத்து ஒன்று குளத்தின் கரை ஓரத்திற்கு வர, அந்த வாத்தை பார்த்ததும் சிங்கம் அதன் அருகில் வருகிறது.

பின்னர் தனது ஒரு காலை தூக்கி அந்த வாத்தின் மீது வைத்து அந்த வாத்தை தடவி கொடுக்கிறது. இருப்பினும் அந்த வாத்து அங்கும் இங்கும் தாவ, சிங்கம் அந்த வாத்திற்கு மீண்டும் மீண்டும் தடவி கொடுக்க முயற்சி செய்வதுபோல் அந்த காட்சி அமைந்துள்ளது.

இந்த காட்சி குறித்து பேசியுள்ள சுசாந்தா நந்தா அவர்கள், "சிங்கம், புலி போன்ற பெரிய பூனைகள் உயிர் பிழைக்கவும், தங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும் மட்டுமே மற்ற விலங்கினங்களை கொல்கிறது எனவும், சிங்கம் ஒரு காட்டு விலங்கு ஆனால் இயற்கையில் காட்டுமிராண்டித்தனமானவர் அல்ல" எனவும் கூறியுள்ளார்.

இந்த காட்சியை பார்த்த சிலர், அந்த சிங்கம் வாத்தை வேட்டையாடத்தான் வந்தது எனவும், வீடியோ நின்ற பிறகு அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கு தெரியும் எனவும் கமெண்ட் பதிவிட்டுவருகின்றனர்.


Advertisement