உலகம்

தொழிலாளியை சிங்கத்தை விட்டு கொலை செய்ய முயன்ற முதலாளி! கடைசியில் என்ன ஆனது தெரியுமா?

Summary:

Lion panjab

பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில் உள்ள ஷாக்தாரா மாவட்டத்தை சேர்ந்தவர் அலி ராசா. இவர் மதக்கூட்டங்கள் நடத்தும் மண்டபம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். திடிரென ஒரு நாள் அவரது மண்டபத்தில் மின் விநியோகத்தில் பழுது ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் அலி ராசா அதே பகுதியை சேர்ந்த முகமது ரக்பி எனற எலக்ட்ரீசியனை வரவழைத்து மின்சார கோளாறை சீர் செய்துள்ளார். ஆனால் அதற்கான சம்பளத்தை தரவில்லை.
அவரும் அப்புறம் வாங்கி கொள்ளலாம் என நினைத்து சென்றுள்ளார்.

ஆனால் வெகு நாட்கள் ஆகியும் சம்பளத்தை தரவில்லை. ரக்பியும் கேட்டு கேட்டு அழுத்து விட்டார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரக்பி நேராக அலி ராசா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அலி ராசா தான் செல்லமாக வளர்த்த சிங்கத்தை விட்டு அவரை கடிக்க வைத்துள்ளார்.

அப்போது வலி தாங்க முடியாமல் ரக்பி கத்தியுள்ளார். சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அலி ராவாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். 


Advertisement