இந்தியா

தனது குட்டிகளுடன் பாதையில் நடந்து வந்த சிங்கம்! எதிரே வந்த பைக் நபருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Summary:

Lion

குஜராத் மாநிலம் கிர் சரணாலய பகுதியில் உள்ள மண் பாதை வழியாக சிங்கம் ஒன்று தனது குட்டிகளுடன் மிகவும் ஒய்யாரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் அந்த சிங்கம் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே பைக்கில் இருவர் வந்துள்ளனர். ஆனால் அவர்களை பார்த்ததும் சிங்கம் பாதையிலிருந்து விலகி வேறு வழியாக சென்றுள்ளது.

இந்த காலத்தில் மனிதர்கள் கூட சாலை விதியை மதிக்காத நிலையில் சிங்கத்தின் இந்த அறிவுப்பூர்வமான செயல் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.


Advertisement