Video : சீறிப்பாய்ந்த கருஞ்சிறுத்தையுடன் சண்டைபோட்டு போராடி உயிர்த்தப்பிய வாலிபர்! வைரலாகும் திகில் வீடியோ....

உத்திரப்பிரதேச மாநிலம் தௌராஹ்ரா வனப்பகுதியிலுள்ள ஜுகானுபூர் கிராமத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. பாபுரி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்த இளைஞர் மிஹிலால் கௌதம் மீது ஒரு சிறுத்தை தாக்குதல் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சிறுத்தை தாக்கிய பிறகும், மிஹிலால் அச்சமின்றி நேரடியாக அதனை எதிர்த்து சண்டையிட்டுள்ளார். சுமார் 5 நிமிடங்கள் நீடித்த போராட்டத்தில் அவர் துடிப்புடன் பதிலடி கொடுத்துள்ளார். இந்த சண்டையில் மிஹிலால் காயம் அடைந்த நிலையில், மற்ற தொழிலாளர்கள் செங்கல்கள் மற்றும் கற்கள் எறிந்து சிறுத்தையை விரட்டினர். பின்னர், சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்த தாக்குதலால் காயமடைந்த மிஹிலால் கௌதம், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி
துத்வா டைகர் ரிசர்வ் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், தற்போது குடியிருப்பு மற்றும் பண்ணை பகுதிகளில் அதிகம் சுற்றிக்கொண்டு வருகின்றன. தௌராஹ்ரா தாலுகாவில் கடந்த சில நாட்களில் சிறுத்தைகள் பல இடங்களில் தோன்றியதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பயத்தால் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற இளைஞர்! நீச்சல் குளத்தில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி...
வனத்துறையின் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வனத்துறை அதிகாரிகள், கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். துத்வா தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளால் பரபரப்பாக இருக்கும் நிலையில், அதன் விலங்குகள் தற்போது வயல்களில் தங்குவதால் அச்சம் அதிகரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வீடியோ பெரும் வரவேற்பு
மிஹிலாலும் சிறுத்தையும் இடையே நடைபெற்ற சண்டையின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
UP के लखीमपुर खीरी में ईंट भट्टे पर तेंदुए ने अचानक हमला करके 5 लोगो को जख़्मी कर दिया। एक वीडियो सामने आया है। जिसमे एक युवक व तेन्दुए की भिड़ंत हो रही है। लोग बहादुर युवक को छुड़ाने की बजाए वीडियो बनाने व ऊपर से ईंट फैंकते दिखे। कई ईंट तो युवक को ही लगती नज़र आ रही है। इस हमले… pic.twitter.com/J6hDAmWzum
— TRUE STORY (@TrueStoryUP) June 24, 2025
இதையும் படிங்க: ரயிலில் கதவு அருகே நின்று கொடூரமாக சண்டை போட்டு தாக்கிய பெண்கள்! நெஞ்சை பதைப்பதைக்கும் வீடியோ…