ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த 6 மர்மமான மரணம்! 14 வருடத்திற்கு பிறகு வெளியான பகீர் காரணம்.



Lady killed 6 persons in same family at kerala

கேரளா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிர் இழந்த சம்பவத்தை அடுத்து அந்த கொலைக்கான குற்றவாளியை போலீசார் கைது செய்துள்னனர்.

கோழிக்கோடு மாவட்டம், கூடாத்தி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாம் ஜோஸ். இவர்,  கடந்த 2008ம் ஆண்டில் திடீரென உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்பே இவரது மனைவி 2002ம் ஆண்டில் உயிரிழந்தார்.

இதனை அடுத்து ஜோசின் மகன் ராய் தாமஸ் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். அவர் இறந்து சில மாதங்களில் அவரது 10 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிர் இழந்தது. மேலும், ஜோசின் மைத்துனரும் சில மாதங்களில் உயிர் இழந்தார்.

Crime

இதுபோற்று 6 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்ததை அடுத்து ஜோசின் மற்றொரு மகன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தீவிர விசாரைணயில் இறங்கிய போலீசார் தற்போது இந்த மரணத்திற்கு காரணமான பெண் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

ஜோசின் மகன் ராய் தாமஸின் முதல் மனைவி ஜோலி தான் திட்டம் போட்டு அனைவரையும் கொலை செய்துள்ளார். அனைவர்க்கும் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜோலியை கைது செய்துள்ள போலீசார் அவருக்கு சயனைடு விற்பனை செய்தவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.