இனி அனைவருக்கும் இலவசம்! ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குஷியான செய்தி!

இனி அனைவருக்கும் இலவசம்! ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குஷியான செய்தி!


laddu-free-for-all-in-thirupathi-devasthanam

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை வணங்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் திருப்பதி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது லட்டுதான். திருப்பதி லட்டுக்கு இணையாக எதுவும் கிடையாது.

அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் லட்டுவை  பிரசாதமாக வாங்கி செல்வர். மேலும் இதற்கு முன்னதாக மலைப்பாதையில் ஏழுமலையானை தரிசிக்க நடந்து வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Thirupathi

அதன்படி திவ்யதரிசனம் சர்வதரிசனம்,  இலவச தரிசனம் என அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 70 ரூபாய் கொடுத்து 4 லட்டுகள் வாங்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டு, கூடுதல் லட்டு வேண்டுமானால் 50 ரூபாய் கொடுத்து லட்டு வாங்கிக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.