மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
முதலாளி வீட்டில் 2கிலோ தங்கத்தை திருடிச்சென்று ராஜவாழ்க்கை வாழ்ந்த தொழிலாளி! 7வருடங்களுக்கு பின் சமூகவலைதளம் மூலம் சிக்கி கொண்ட சம்பவம்!
சந்தீப் என்ற கொள்ளையன், 2010ஆம் ஆண்டு மும்பைக்கு வந்துள்ளான். அப்போது, அங்குள்ள ஒரு தொழில் அதிபர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளான். இதனையடுத்து அந்த தொழில் அதிபரின் கடை ஒன்றில் சந்தீப் பொறுப்பாளராக பணியாற்றிவந்துள்ளான்.
இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு அந்த தொழிலதிபரின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக வெளியூர் சென்ற அவர், வீட்டின் பொறுப்பை சந்தீப்பிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட சந்தீப் வீட்டின் சாவியை திறந்து. வீட்டில் இருந்த இரண்டு கிலோ தங்கத்தை எடுத்து எஸ்கேப் ஆகிவிட்டான்.
வீட்டிற்கு திரும்பிய தொழிலதிபர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், குஜராத்துக்கு தப்பி சென்ற சந்தீப், அங்கிருந்து ராஜஸ்தானுக்கு சென்றுள்ளான். அதன் பின் உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு சென்று அங்கு ஒரு வீடு மற்றும் சொந்தமாக சைனீஸ் உணவகம் ஒன்றை வாங்கியுள்ளான்.
அதன்பின், திருமணம் செய்து கொண்ட சந்தீப்பிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது அவன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவு மூலம் உத்திரபிரதேசம் மதுராவில் இருப்பதை அறிந்த போலீசார் பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து சந்தீப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.