இந்தியா

அவனுக்கு இந்த தண்டனை பத்தாது.! விரியன் பாம்பை ஏவி மனைவியை கொன்ற வழக்கு.! மாமியார் ஆவேசம்

Summary:

அவனுக்கு இந்த தண்டனை பத்தாது.! விரியன் பாம்பை ஏவி மனைவியை கொன்ற வழக்கு.! மாமியார் ஆவேசம்

மனைவியை பாம்பு கொண்டு கடிக்க வைத்து கணவரே கொலை செய்த் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா. இவர் கடந்தாண்டு மே 6ஆம் தேதி வீட்டு கட்டிலில் படுத்திருந்த போது விஷப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சூரஜ் தான் மனைவியை கொடிய விஷம் கொண்ட விரியன் பாம்பை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் உத்ராவை கொன்றுவிட்டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பாம்பை வாடகைக்கு வாங்கி கடிக்க வைத்தது தெரிந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சூரஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று தண்டனை வழங்கப்பட்டது. மனைவி மீது பாம்பை கடிக்கச் செய்து கொலை செய்த வழக்கில் கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ 5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தநிலையில், சூரஜுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அவரின் மாமியாரும், உத்ராவின் தாயார் கூறுகையில், என் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை, இந்த தண்டனை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை, நான் மரண தண்டனையை தான் எதிர்பார்த்தேன். இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.


Advertisement