இந்தியா

"திருமண விழாக்களை தள்ளி வையுங்கள்" - கொரோனாவை தடுக்க கேரள அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Summary:

Kerala minister asked to postpone marriages

சீனாவில் உருவாகி பல உயிர்களை பலி வாங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிற்கும் வந்துவிட்டது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய கேரள மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 

மேலும் தற்போது நாடு திரும்பிய மற்றொரு மாணவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரது இரத்த மாதிரிகள் புனேவிற்கு சோதனைக்காக அனுப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 

இவர்கள் இருவரை தவிர மேலும் பலர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். அவர்களை 14 நாட்கள் தீவிர கண்கானிப்பில் ஈடுபடுத்தூயுள்ளனர் மருத்துவர்கள். 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கேரள சுகாதார துறை அமைச்சர் சைலஜா, "சீனாவில் இருந்து நாடு திரும்பியுள்ளவர்கள் வீடுகளில் நடைபெறுவதாக இருந்த திருமண விழாக்களை தள்ளிவையுங்கள். திருமணங்களௌ எப்போதே வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம். ஆனால் விழாகக்ளில் கூடும் மக்களின் உடல்நிலை மகத்தானது. எனவே கவனமாக இருங்கள்" என அறிவித்துள்ளார். 


Advertisement