புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கால்வாயில் பாய்ந்து விபத்திற்குள்ளான பேருந்து; 2 பேர் பலி.. கேரளாவில் சோகம்.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில், அன்னம்போயில் பகுதியில் இருந்து திருவம்பாடி நோக்கி, அம்மாநில அரசுப்பேருந்து ஒன்று பயணம் செய்தது. பேருந்து முழுவதும் பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த பேருந்து திருவம்பாடி பகுதியில் உள்ள கால்வாய் சாலையில் வந்தபோது, பாலத்தில் சென்றுகொண்டு இருந்த வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்து, தலைகீழாக உருண்டு விபத்திற்குள்ளானது.
இதையும் படிங்க: காதலியின் அடகுவைத்த நகையை திருப்ப ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி; இளைஞர் அதிர்ச்சி செயல்.!
2 பெண்கள் பலி., 3 பேர் கவலைக்கிடம்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் த்ரெசியம்மா மாதேவ் (வயது 75), கமலா (வயது 61) ஆகிய 2 மூதாட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியோர் அங்கிருந்து வெளியேறி உயிர்தப்பினர். மேலும், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மீட்பு படையினர் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட ப்ளஸ்1 மாணவர் & மாணவி; காரணம் என்ன?.!