"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட ப்ளஸ்1 மாணவர் & மாணவி; காரணம் என்ன?.!
கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம், புயப்பள்ளி பகுதியில் வசித்து வரும் நபர் தேவானந்தா (வயது 17). அங்குள்ள வேறொரு பகுதியைச் சேர்ந்த மாணவி ஷெபீன்ஸா (வயது 16).
இவர்கள் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயின்று வந்துள்ளனர். இதனிடையே, இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் மாயமாகி இருக்கின்றனர். இருவரையும் அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடியபோதும் காணவில்லை. இதனால் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; கல்லூரி பேராசிரியர் மாரடைப்பால் மரணம்.!
புகாரை ஏற்ற காவல்துறையினர், மாயமான சிறார்களை தேடி வந்த நிலையில், இருவரும் அங்குள்ள சாஸ்தாம்கோட்டா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படும் நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: முற்றிப்போன ரீல்ஸ் மோகம்; இளம் தம்பதி, 3 வயது குழந்தை உடல் சிதறி பலி.!