#Breaking: ரூ.5 இலட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு: கேரள காவல்துறையின் அதிரடி நடவடிக்கை.!

#Breaking: ரூ.5 இலட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு: கேரள காவல்துறையின் அதிரடி நடவடிக்கை.!



kerala-kollam-6-aged-child-kidnapped-case-now-girl-resc

 

ஊடகங்களில் வெளியான செய்தி, கேரளா காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக  பதறிப்போன கடத்தல் குழு, சிறுமியை ஆசிரமம் ஒன்றின் மரத்தடியில் விட்டுசென்ற சம்பவம் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம், பூயப்பள்ளி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, நேற்று தனது டியூஷனில் இருந்து வீட்டிற்கு சகோதரருடன் நடந்து வந்துகொண்டு இருந்தார். 

அச்சமயம் சிறுமியை காரில் வந்த மர்ம கும்பல் கடத்திச்செல்லவே, வீட்டிற்கு சென்ற சகோதரன் சிறுமி கடத்தப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர், உடனடியாக களத்தில் இறங்கி தீவிர விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், சிறுமி கடத்தப்பட்டது தொடர்பான தகவல் செய்திகளாக வெளியாகின. 

இதனிடையே, சிறுமியை கடத்திய மர்ம கும்பல், சிறுமியிடம் இருந்து அவரது தாயின் செல்போன் நம்பரை பெற்று ரூ.5 இலட்சம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறது. 

காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்த, ஊடகங்களில் செய்தியும் வெளியானதால் பதறிப்போன கடத்தல் குழு, சிறுமியை கொல்லம் ஆஸ்ரமம் ஒன்றில் இறக்கிவிட்டுச்சென்றுள்ளது. 

சிறுமி தனியே நின்றுகொண்டு இருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர் சிறுமியிடம் விசாரித்து இருக்கிறார். அப்போது சிறுமி தனது அம்மாவின் செல்போன் நம்பரை கூறி பேசி இருக்கிறார், தான் கடத்தப்பட்டதையும் விவரித்துள்ளார். 

நிலைமையை புரிந்துகொண்ட இளைஞர், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த அதிகாரிகள் சிறுமியை பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். சிறுமியின் பெற்றோரும் மகளை காண விரைந்துள்ளனர். 

தலைமறைவாக சுற்றிவரும் கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.