குடும்பத்துடன் தற்கொலை.. ஆட்டோவில் மனைவி, மகள்களுடன் தந்தை நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி செயல்.!

குடும்பத்துடன் தற்கொலை.. ஆட்டோவில் மனைவி, மகள்களுடன் தந்தை நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி செயல்.!


kerala-father-murdered-his-own-family-and-suicide

மனைவி மற்றும் மகளை தீ வைத்து எரித்து கொன்று விட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னா கிராமத்தில் வசித்து வருபவர் முகமது. இவரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்த நிலையில், வியாழக்கிழமை தனது 2மகள்கள் மற்றும் மனைவியை காண வந்துள்ளார். 

அப்போது அவர்களை சரக்கு வாகனத்தில் அமர வைத்த முகமது, தீ வைத்து கொளுத்தியிருக்கிறார். இந்த கொடூர சம்பவத்தில், முகமதுவின் மனைவி மற்றும் முகமதுவின் மூத்த மகள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். 

KERALA

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த பின் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அப்போது முகமதுவின் 5 வயது மகளை மட்டும் உயிருடன் மீட்டு, மலப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து மனைவி மற்றும் குழந்தையை தீ வைத்து எரித்துக் கொலை செய்த முகமது தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.