"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
காதலனை நிர்வாணமாக்கி சிகரெட்டால் சூடுவைத்து ரசித்த கல்லூரி மாணவி.. ஆசையாய் போன காதலனுக்கு நடந்த அலங்கோலம்..!!
முன்னாள் காதலி அழைக்கிறாள் என ஆசையாய் சென்ற இளைஞருக்கு காத்திருந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கேரள மாநிலத்தில் உள்ள வர்க்கலா சேர்னியூர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி பிரியா (வயது 19). இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞருக்கும், லட்சுமி பிரியாவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் படிக்கும் சமயத்தில் வேறு ஒரு மாணவருடன் லட்சுமி பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். இதில் மனமுடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து காதலை கைவிட்டுவிடக்கூடாது என்று கோரியுள்ளார். ஆனால் இரண்டாவது காதலின் மீது ஈடுபாடு கொண்ட பிரியா அதனை தவிர்த்து வந்துள்ளார்.
தொடர்ந்து முதல் காதலர் லட்சுமி பிரியாவை சந்தித்து வந்துள்ளார். இதனால் உன்னை சந்திக்க வேண்டும் என்று முதல் காதலனுக்கு அழைப்பு விடுத்த லட்சுமி பிரியா அங்கு முதல் காதலனை, இரண்டாவது காதலர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவரை சித்திரவதை செய்து நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடுவைத்து செல்போனை பறித்து தப்பி சென்றுள்ளனர். அத்துடன் அவர் அருகில் இருந்தவர்களால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரின் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த நிலையில், எர்ணாகுளத்தில் பதுங்கி இருந்த லட்சுமி பிரியா கைது செய்யப்பட்டார். அவரின் காதலர் மற்றும் கூட்டாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.