நடவு வயலில்.. கட்டிப்புரண்டு பெண்கள் செய்த செயல்.. தீயாக பரவும் வீடியோ.!



karnataka women fight video viral

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா பகுதியைச் சேர்ந்த புட்டசாமி என்பவருக்கு சுகன்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ராகேஷ் என்ற மகன் மற்றும் ரோஜா என்ற மகள் இருந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் சுகன்யா குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 

இதன்பின்புட்ட சாமி இரண்டாவதாக பாக்யா என்ற பெண்ணை திருமணம் செய்து அதன் மூலம் குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் புட்டசாமி உயிரிழந்துள்ளார். அவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொள்வதில் இரு மனைவிகளின் குடும்பங்களுக்கு இடையில் தகராறு ஏற்பட, இதனை தொடர்ந்து ஊர் பெரியவர்கள் தலையிட்டு பாக்கியாவுக்கு 2 ஏக்கர் நிலத்தையும் ராகேஷ் மற்றும் ரோஜா ஆகியோருக்கு 4 ஏக்கர் நிலத்தையும் பிரித்துக் கொடுத்தனர்.


இதையும் படிங்க: நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!

ஆனால், இதற்கு ரோஜா மற்றும் ராகேஷ் சம்மதிக்காமல் மொத்தமாக தங்களுக்கே வேண்டும் என்று அடாவடி செய்து போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்து இரு தரப்புக்கும் சமமாக முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு மொத்தம் 3 ஏக்கரையும் பாக்யாவுக்கு 3 ஏக்கரையும் பிரித்து கொடுத்தனர். 

இந்த நிலையில், மிகுந்த ஆத்திரமடைந்த ரோஜா மற்றும் ராகேஷ் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாக்யாவிடம் சென்று தகராறு செய்தனர். அப்போது, ரோஜாவிற்கும், பாக்யாவுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன ஒரு திறமை! மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய இசை! அதுவும் எப்படினு பாருங்க... வைரலாகும் வீடியோ காட்சி....