சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 பணம்.. ரூ.30 ஆயிரத்திற்கு பாக்கெட்டுகளை வாங்கி குவித்த கிராமம்., இறுதியில் பட்டை நாமம்..!

சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 பணம்.. ரூ.30 ஆயிரத்திற்கு பாக்கெட்டுகளை வாங்கி குவித்த கிராமம்., இறுதியில் பட்டை நாமம்..!



Karnataka Villagers Buy Chips for Rs 30 Thousand INR

பரிசு பணத்திற்கு ஆசைப்பட்டு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கிக்குவித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய சோகம் நடந்துள்ளது.

நொறுக்குத்தீனிகள் என்றால் குழந்தைகளின் விருப்பமானது என பலரும் கூறுவார்கள். அவை உடலுக்கு சத்துக்களை வழங்கவில்லை என்றாலும், அதன் சுவைக்காக குழந்தைகளால் விரும்பப்படுகிறது. கடைகளில் நொறுக்குத்தீனிகள் விற்பனையை அதிகரிக்க அவ்வப்போது நொறுக்குத்தீனி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் விளம்பர உக்தியையும் கையாளும். 

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தின் லிங்கசுகூர் கிராமத்தில் சிப்ஸ் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் கடையில் சிப்ஸ் பாக்கெட்டில் தின்பண்டதோடு ரூ.500 பணமும் இருந்துள்ளது. அங்குள்ள 5 நிறுவனதாரர்களின் சிப்ஸ் பாக்கெட்டில் விற்பனைக்காக ரூ.500 பணம் சேர்க்கப்பட்டதாக தெரியவருகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பலரும் கடைகளுக்கு சென்று சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி குவித்தனர். இதனால் அக்கிராமத்தில் உள்ள கடையில் ரூ.30 ஆயிரம் அளவிலான வசூல் ஒரே நாளில் நடைபெற்றுள்ளது. ஆனால், சிப்ஸ் பாக்கெட்டுகளில் பணம் இல்லை. விற்பனையை அதிகரிக்க நினைக்கும் நிறுவனத்தின் விளம்பர யுக்தியாக இருக்கலாம் என மக்கள் கவலை தெரிவித்தனர்.