கலையப்போகிறதா கர்நாடக மாநில அரசு?.. மேலிடத்திற்கு பறந்த பரபரப்பு ஊழல் கடிதம்.!

கலையப்போகிறதா கர்நாடக மாநில அரசு?.. மேலிடத்திற்கு பறந்த பரபரப்பு ஊழல் கடிதம்.!


Karnataka Politics Going Critical Stage due to Corruption Issue

கர்நாடக அரசின் மீது, 40 % கமிஷன் கேட்பதாக கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்து கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தவும் மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், இதனால் கர்நாடக அரசில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக ஆளுநரை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார், சித்தராமையா உட்பட தலைவர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

karnataka

மேலும், காங்கிரஸ் தரப்பில் 40 % கமிஷன் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, கர்நாடக அரசை 356 ஆவது பிரிவின் படி கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கடிதத்தை வழங்கியுள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுத்துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த கடிதம் கிடைத்ததும் பிரதமர் நரேந்திர மோடி மாநில அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், மத்திய அரசு ஊழல் விவகாரத்தில் சமரசம் செய்வதை உறுதி செய்யும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஊழல் புகார் தொடர்பாக மத்திய, மாநில ஊழல் தடுப்பு பிரிவுகள் ஏதும் விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை. வழக்குப்பதிவும் செய்யவில்லை. 

karnataka

அடுத்தடுத்த பல ஊழல் புகார்கள் கர்நாடக மக்களிடையே மனதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில கான்ட்ராக்டர்கள் ஹேக்கர்களின் உபயோகத்துடன் அரசு டெண்டரை திருடியதாகவும் தெரியவருகிறது. கடந்த 2019 ஆம் வருட அரசு அதிகாரி சைலஜா காவல் நிலையத்தில் அளித்த ஊழல் புகார் தொடர்பான விசாரணை இன்று வரை என்ன ஆனது என்றும் தெரியவில்லை. 

ஊழல் வழிகளில் பெறப்படும் பணத்தை மந்திரிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் விழுங்கியுள்ளதும் உறுதியாகியுள்ள நிலையில், இந்த சம்பவங்கள் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் புகாரை வைத்து எதிர்க்கட்சிகள் போர்கொடியை தூக்கியதை போல, மக்களும் வீதியில் போராட்டத்தில் குதித்தால் அம்மாநில அரசியல் நிலவரம் என்னவாகும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.