காதல் திருமணமா?.. மகளை ரெஜிஸ்டர் ஆபிஸிலேயே அடித்து நொறுக்கி, தரதரவென இழுத்துச்சென்ற அப்பா.!

காதல் திருமணமா?.. மகளை ரெஜிஸ்டர் ஆபிஸிலேயே அடித்து நொறுக்கி, தரதரவென இழுத்துச்சென்ற அப்பா.!


Karnataka Mysore Nanjangud Love Marriage Issue Father Rupture at Register Office

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், நஞ்சன்கூடு ஹதராலே கிராமத்தை சார்ந்தவர் பசவராஜ் நாயக். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரது மகள் சைத்ரா (வயது 21). இவர் ஹதராலே கிராமத்திற்கு அருகேயுள்ள, ஹல்லரே கிராமத்தை சார்ந்த மகேந்திரா (வயது 21) என்ற வாலிபரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார். 

இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, சைத்ராவின் பெற்றோர் அவரது காதலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சைத்ரா தனது காதலில் உறுதியாக இருக்கவே, பசவராஜ் நாயக் தனது மகளுக்கு வரன் பார்க்க தொடங்கியுள்ளார். இதனை அறிந்த சைத்ரா, வீட்டினை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்து, தகவலை காதலன் மகேந்திராவிடம் தெரிவித்துள்ளார்.

காதல் ஜோடியின் திட்டப்படி நேற்று காலை சைத்ரா வீட்டில் இருந்து வெளியேறி, காதலனை சந்தித்த நிலையில், இருவரும் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பதிவு திருமணம் செய்துள்ளனர். மகேந்திராவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரும் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

karnataka

இந்த தகவலை அறிந்த சைத்ராவின் தந்தை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மகள் மணக்கோலத்தில், கழுத்தில் தாலியுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மக்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், மகளை சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தில் இருந்த தாலியை அறுத்து வீசியுள்ளார். 

மகளை தரதரவென இழுத்து வீட்டிற்கு அழைத்து செல்ல முற்படவே, அங்கிருந்தவர்கள் சைத்ராவை மீட்டு இருக்கின்றனர். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.