இந்தியா

"பார்த்தீர்களா, இதுதான் சகோதரத்துவம்"... தலித் தலைவர் சாப்பிட்ட இனிப்பை வாங்கி சாப்பிட்ட எம்.எல்.ஏ...!

Summary:

பார்த்தீர்களா, இதுதான் சகோதரத்துவம்... தலித் தலைவர் சாப்பிட்ட இனிப்பை வாங்கி சாப்பிட்ட எம்.எல்.ஏ...!

சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்காக எம்.எல்.ஏ ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு எம்.எல்.ஏ சமீர் அகமது கான் ஆவார். இவர் நேற்று அங்கு நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மேடையில் பேசிய அவர், மர்ம நபர்கள் சிலர் சமூகத்தினர் இடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இரு சமூகத்தினருக்கும் இடையே சண்டை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் இனிப்பை பரிமாறிக்கொண்ட நிலையில், தலித்தலைவர் உண்ட இனிப்பை தனக்கு தருமாறு எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.இதனால் அவர் வாயில் சாப்பிட்டுக்கொண்டிருந்த இனிப்பை உமிழ்ந்து எம்.எல்.ஏவுக்கு ஊட்டி விட்டுள்ளார். இதனை அவரும் சாப்பிட்டு, "பார்த்தீர்களா, இதுதான் சகோதரத்துவம்" என்று கூறியுள்ளார்.

அத்துடன் 'இங்கு அனைவரும் சமம் எனவும், சமூகத்தினர் இடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்' என்றும் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பலரும் எம்.எல்.ஏவின் செயலை கைதட்டி வரவேற்று இருக்கின்றனர்.


Advertisement