காதல் திருமணம் செய்தவர் படுகொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்.. கர்ப்பிணி மனைவி கண்ணீருடன் தவிப்பு.!
இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள், ஒருவரை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், காக்வாட் தாலுகா, கத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் சிந்தாமணி பண்டேகார் (வயது 26). இவர் தீப்தி என்ற பெண்ணை காதலித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த நிலையில், தீப்தி தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கிறார்.
தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக ஐனாபுரா கிராமத்தில் சிந்தாமணி மருந்து கடை ஒன்றை தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு மருந்து கடையை பூட்டிவிட்டு கத்ரா நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது இவரது இரு சக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர், சிந்தாமணியை கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். அத்துடன் கொலை செய்த கையோடு வேறு யாரும் பார்ப்பதற்குள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்தாமணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.