ஹிஜாப் விவகாரம்: 144 தடையாணை பிறப்பித்து கல்லூரிகள் திறப்பு..!

ஹிஜாப் விவகாரம்: 144 தடையாணை பிறப்பித்து கல்லூரிகள் திறப்பு..!



Karnataka Hijab Row Issue 144 Section Implemented at College and Near 200 m Area Feb 16 Reopen

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சூடுபிடித்து கலவர சூழலை ஏற்படுத்திய நிலையில், இந்திய அளவில் தெரியவந்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கர்நாடகாவில் உள்ள பல மாவட்டங்களில் அடுத்தடுத்து பல்வேறு பதற்ற சூழலும் ஏற்பட்டன. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தில் பிப். 16 ஆம் தேதி முதல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், கல்லூரி வளாகங்களில் 200 மீட்டர் அளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

karnataka

மறுஉத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு கல்லூரி வளாகங்களில் அமலில் இருக்கும் என்றும் துமகுரு மாவட்ட உதவி ஆணையர் ஒய்.எஸ் பாட்டீல் அறிவித்துள்ளார். மேலும், கல்லூரிகளுக்கு அருகே ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவையும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக பெங்களூர், பாகல்கோட், சிக்கபள்ளாபூர், காடாக், சிவமொக்கா, மைசூர், தக்ஷிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் கல்லூரி மற்றும் கல்லூரி அருகே 200 மீட்டர் அளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.