கணவனுக்காக கரடியை கோடரியால் தாக்கி கொன்ற மனைவி; வயலில் நடந்த பரபரப்பு சம்பவத்தில் பயங்கரம்.!karnataka-havery-bear-attacked

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம் சிக்காவி, முண்டகொடா கிராமத்தைச் சார்ந்தவர் பஷீர் ஷாப் சவதத்தி. இவரின் மனைவி ஷபீனா. இவர் கோணங்கேரி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருகிறார். தம்பதிகளுக்கு பாசனகட்டி பகுதியில் விளைச்சல் நிலம் இருக்கும் நிலையில், இது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள நிலமாகும். 

மாலை நேரத்தில் தம்பதிகள் இருவரும் தங்களது நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், தோட்டத்திற்குள் இரண்டு பெண் ஒரு ஆண் என மூன்று கரடிகள் புகுந்துள்ளன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பஷீர் தப்பிக்க முயற்சித்த நிலையில், மூன்று கரடிகளும் அவரை தாக்கி இருக்கின்றது. 

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்றொரு விவசாயி பஷீரை கரடிகளிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்துள்ளார். அவரையும் கரடிகள் தாக்கிய நிலையில், பஷீரின் மனைவி சபீனா ஆவேசத்தில் உயிர்களை காக்க கோரிடாரியை எடுத்து கரடிகளை தாக்கி இருக்கிறார். 

karnataka

இதில் ஒரு கரடியின் தலையில் பலத்த காயம் ஏற்படவே, கரடிகள் அலறிக்கொண்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றுள்ளது. கரடிகள் தாக்கியதில் காயமடைந்த இரண்டு பேரையும் பொதுமக்கள் உதவியோடு சபீனா மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். 

இதனிடையே ஷபீனா தாக்கியதில் காயமடைந்த ஒரு கரடி உயிரிழந்துவிடவே, இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கரடியின் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். இது குறித்து தம்பதிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.