
தினமும் வீடியோ கால் செய்து தொல்லை.. விபரீத முடிவெடுத்த 22 வயது மாணவி.. கடிதத்தில் பகீர் தகவல்.!
அரசுபோட்டித்தேர்வு தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த மாணவிக்கு சக மாணவர்கள் 2 பேர் வீடியோ கால் செய்து தொல்லை கொடுத்ததால், மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார், சப்தாபுரா பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் கே.ஏ.எஸ் தேர்வு உட்பட பல அரசுத்தேர்வுகளுக்கு பலரும் பயின்று வருகின்றனர். இந்த மையத்தில் தார்வாரை சேர்ந்த மாணவி கீதா (வயது 22) பயின்று வரும் நிலையில், தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் விடுதியில் உள்ள தனது அறையில் கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவே, இந்த விஷயம் தார்வார் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்துகையில், கீதா கைப்பட எழுதிய கடிதம் அறையில் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "பயிற்சி மையத்தில் தன்னுடன் பயின்று வரும் பிரவீன் (வயது 24), அட்வெபயப்பா (வயது 22) ஆகியோர் எனக்கு வீடியோ கால் செய்து தொந்தரவு செய்கிறார்கள்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். அவர்களை மன்னிக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், 2 மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement