இந்தியா

Ex-காதலிக்கு தோஸ்துகளின் நம்பரில் இருந்து தொல்லை.. ஆவேசத்தில் பெண் செய்த பரபரப்பு காரியம்.!

Summary:

Ex-காதலிக்கு தோஸ்துகளின் நம்பரில் இருந்து தொல்லை.. ஆவேசத்தில் பெண் செய்த பரபரப்பு காரியம்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னடா மாவட்டம், கடபா கோக்கடா பகுதியில் 25 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இதே பகுதியில் இளம்பெண்ணும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் பின்னாளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்

காதலி பிரிந்து சென்றாலும் அவருக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி வந்த இளைஞர், தொடர் தொந்தரவு செய்து வந்தமையால் அவரின் அலைபேசி எண்ணை இளம்பெண் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது நண்பர்களின் அலைபேசி எண் மூலமாக பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தொல்லை செய்ய தொடங்கியுள்ளார். 

ஒரு சமயத்திற்கு மேல் விரக்தியடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பிய 15 பேரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் காதலனின் சர்ச்சை செயல் தெரியவரவே, இளம்பெண்ணின் முன்னாள் காதலனை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement