இந்தியா Covid-19

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா உறுதி! மருத்துவமனையில் அனுமதி

கராநாடகா முதல்வரும் பிஜேபி மூத்த தலைவருமான எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு தற்போது அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதியானது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது நேற்றைய சோதனையில் உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, தான் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் தன்னை சந்தித்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.


Advertisement