நான் உன்னை காதலிக்கவில்லை., உன்னுடன்..., காதலன் பகிரங்க எச்சரிக்கை.. காதலி புகார்.!Karnataka Chitradurga Woman Cheated by Love Boy

உல்லாசமாக இருக்கத்தான் காதலிப்பது போல நடித்தேன், உன்னை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என பகிரங்க மிரட்டல் விடுத்த காதலனின் மீது காதலி புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம், ஒசதுர்கா தொட்டகட்டே கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாத் (வயது 28). இதே கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்படவே, பின்னாளில் செல்போன் எண்ணை பரிமாறி பேச தொடங்கியுள்ளனர். 

இதனையடுத்து, இருவரும் காதலர்களாக மாறிய நிலையில், அவ்வப்போது ஜோடியாக பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி இருக்கின்றனர். விஸ்வநாத் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஸ்வநாத் பெண்ணிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

karnataka

இதனால் சுதாரித்த பெண்மணி காதலனை சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தவே, விஸ்வநாத் நான் உன்னை காதலிக்கவில்லை. உன்னை திருமணம் செய்ய முடியாது. உல்லாசமாக இருக்கத்தான் காதலிப்பது போல நடித்தேன். உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என்று கூறி மிரட்டி இருக்கிறார். காதலன் ஏமாற்றியதை எண்ணி மனமுடைந்த பெண்மணி, ஒசதுர்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகார் தொடர்பான விவகாரம் விஸ்வநாத்துக்கு தெரியவரவே, அவர் காவல் துறையினர் கைதுக்கு பயந்து தற்போது தலைமறைவாகி இருக்கிறார். அவருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.