11 வயது சிறுமியை பலவந்தப்படுத்தி சீரழித்த கொடூரம்.. தாயில்லாத நேரத்தில் இரண்டாவது தந்தை வெறிச்செயல்.!karnataka-chikmagalur-step-father-sexual-abused-step-da

வளர்ப்பு தந்தை தனது மனைவியின் மூத்த மகளை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் மாவட்டம், என்.ஆர் புரா பாலோஒன்னூர் கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்மணிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த பெண் கணவரை பிரிந்து மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், கூலிவேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.   

இந்த நிலையில், பெண்ணுக்கும் - அப்பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணன் 30 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்யவே, திருமணத்தை தொடர்ந்து 2 மகள்கள் மற்றும் கிருஷ்ணனுடன் பெண் வசித்து வந்துள்ளார். 

கிருஷ்ணன் மகள்களுக்கு பாதுகாப்பாக இருப்பான் என எண்ணி இரண்டாவது கணவரை நம்பி பெண் வேலைக்கு செல்ல, தந்தையாக இருக்க வேண்டிய கயவன் பெண்ணின் மூத்த மகளான 11 வயது சிறுமியை சீரழித்து இருக்கிறான். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் கயவன் பாலியல் தொல்லை கொடுக்க, சிறுமியும் செய்வதறியாது அவனை பற்றி தாயிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

karnataka

இதனை தனக்கு சாதகமாக்கிய கொடூரன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறான். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று தாயிடம் விஷயத்தை கூறி கதறி அழுதுள்ளார். 

இதனைக்கேட்டு வென்குண்டெழுந்த தாய் இரண்டாவது கணவரான கிருஷ்ணனிடம் சண்டையிடவே, அவன் பெண்ணை தாக்கி இருக்கிறான். இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து, கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.