மலைப்பகுதியில் காதலனுடன் சென்ற சிறுமி., காதலன் உட்பட 3 பேரால்.., பரபரப்பு சம்பவம்.!

மலைப்பகுதியில் காதலனுடன் சென்ற சிறுமி., காதலன் உட்பட 3 பேரால்.., பரபரப்பு சம்பவம்.!


Karnataka Chikkaballapura Minor Girl Rape Attempt by Love boy and his 2 Friends 3 Arrested by cops

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இருவர் மற்றும் சிறுமியின் காதலன் உள்ளிட்ட மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டம், பாகேபள்ளி புறநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் பயின்று வருகிறார். இந்த நிலையில், மாணவி கடந்த 11-ம் தேதி இவர் தனது தேர்வினை முடித்து விட்டு, காதலனுடன் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது மாணவியின் காதலன் நாராயணசாமி அவரை பாகேபள்ளி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவரது  நண்பர்களான மஞ்சு, சுரேஷ், நாகராஜ் ஆகியோர் மதுபோதையில் இருந்துள்ளனர். மேலும், மாணவிக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து மஞ்சுவும், நாராயணசாமியும் அங்கிருந்து கிளம்பிய நிலையில், நாகராஜும் , சுரேஷம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.

karnataka

அப்போது நாராயணசாமி அப்பகுதி மக்களின் உதவியுடன் மாணவியை மீட்டுள்ளார். இது குறித்து மாணவி பாகேபள்ளி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜ், சுரேஷ் மற்றும் மாணவியின் காதலன் நாராயணசாமி உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.