சலூன் கடை மசாஜால் பகீர்; பக்கவாதம் ஏற்பட்டதால் வாடிக்கையாளருக்கு பேரதிர்ச்சி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 30). கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக ராஜ்குமார் சலூன் கடைக்கு சென்று சிகைத்திருத்தம் செய்துகொண்டுள்ளார்.
அப்போது, சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளி, இலவசமாக தலைக்கு மசாஜும் செய்து இருக்கிறார். இதனிடையே, ராஜ்குமாருக்கு திடீரென கடுமையான கழுத்து வலி ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மசாஜ் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எஞ்சின் ஆயில் தான் 25 ஆண்டுகளாக எனது உணவு; பீதியை கிளப்பிய பக்தர்.. இப்படியும் ஒரு மனிதரா?.!
மருத்துவமனை சோதனையில் அதிர்ச்சி
பின் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற ராஜ்குமாருக்கு, சிலமணிநேரத்தில் வாய் பேச இயலாமல் குழறி இருக்கிறது. பின் விரைந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு நடந்த சோதனையில், அதிக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யப்பட்டதால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதும், கரோடிட் தமனி உடைக்கப்பட்டுள்ளதும் உறுதியானது. மேலும், பாதிக்கப்பட்டவர் 2 மாதங்கள் மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
அனுபவம் இல்லாத நபர்களிடம் மசாஜ் செய்தால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து செயல்படுவது சாலச்சிறந்தது.
இதையும் படிங்க: "யாரு கூட படுத்தாச்சும், எனக்கு குழந்தை பெத்து கொடு.." சைக்கோ கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!!