காதலனுடன் 3 மாதங்கள் தலைமறைவாக இருந்த இளம்பெண்! நைசாக வீட்டிற்கு பேசுவதாக அழைத்து சென்று உயிரை காவு வாங்கிய குடும்பம்.... கொலை நடுங்கவைக்கும் சம்பவம்..!!!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இளம்பெண் ஒருவர் தனது விருப்பப்படி காதலனுடன் வாழ்ந்ததால் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்த அவரை கண்டுபிடித்த குடும்பம், பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்துச் சென்று உயிரைப் பறித்துள்ளது. தற்போது இந்த கௌரவக் கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
காதல் உறவால் குடும்பத்தில் பதற்றம்
பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யவ்வா என்ற இளம்பெண், தனது திருமண வாழ்க்கையைத் தாண்டி கிருஷ்ணா என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததாக தகவல். இதனை குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். இதையடுத்து, காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், சில மாதங்கள் வெளியூரில் மறைந்து வாழ்ந்து வந்தார். இதனால் குடும்பத்தினர் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.
மீண்டும் அழைத்துச் சென்ற குடும்பம்
சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு, மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் தங்கியிருந்த சத்யவ்வாவை அவரது உறவினர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் சமரசம் பேச வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றனர். தகவலின்படி, சாதி வேறுபாட்டை காரணமாகக் காட்டி அந்த உறவை கைவிடுமாறு அழுத்தம் தந்துள்ளனர். ஆனால் காதலனுடன் வாழவேண்டும் என்ற தனது முடிவில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.
விஷம் கொடுத்து கொலை
இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், மார்ச் 21ஆம் தேதி கொடூர முடிவுக்கு வந்தனர். மாமா பிரகாஷ் பீமப்பா, சகோதரர் ஷனூர் சதாசிவ் மற்றும் மைத்துனர் மொராபாத் கல்லப்பா ஆகியோர் இணைந்து, இளம்பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்து விஷம் அருந்தச் செய்து கொலை செய்துள்ளனர். குடும்பமே சேர்ந்து செய்த இந்த குடும்பக் குற்றம் தற்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.