படிப்பில் கவனம் செலுத்தக்கூறி தாய் கண்டித்ததால் ஆத்திரம்: துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு 19 வயது கல்லூரி மாணவர் தற்கொலை.!

படிப்பில் கவனம் செலுத்தக்கூறி தாய் கண்டித்ததால் ஆத்திரம்: துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு 19 வயது கல்லூரி மாணவர் தற்கொலை.!


karnataka-bangalore-youth-shot-dead-himself-after-mothe

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், மடநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு உத்தப்பா (வயது 19). இவர் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். 

பெற்றோருடன் வசித்து வரும் விஷ்ணு, படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை தாய் எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தக்கூறி கண்டித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று படிப்பில் கவனம் செலுத்தக்கூறி தாய் மகனை கண்டித்து இருக்கிறார். இதனால் மனவேதனையடைந்த விஷ்ணு, தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து நெஞ்சில் வைத்து சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷ்ணு உத்தப்பாவின் மரணம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.