13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
6 வயது மகனை முதலைகளுக்கு பலிகொடுத்த தாய்; தகப்பனின் அவச்சொல்லால் விபரீதம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 36). இவரின் மனைவி சாவித்ரி (வயது 32). தம்பதிகளுக்கு வினோத் என்ற 6 வயதுடைய மகன் இருக்கிறார்.
தந்தையின் சொல்லால் நிம்மதியின்றி தவித்த தாய்:
பிறந்ததில் இருந்து செய்வித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட வினோத்தை, அவரின் தந்தை ரவிக்குமார் எப்போதும் கடிந்துக்கொண்டு இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் சிறுவனை கால்வாயில் வீசி கொலை செய்வேன் என வினோத் திட்டி வந்துள்ளார். சிறுவனின் ஒவ்வொரு செயலையும் கடுமையாக கண்டித்து இருக்கிறார்.
மனதை கல்லாக்கி விபரீத முடிவு:
இதனால் ஒருகட்டத்தில் மனவிரக்தியடைந்த பெண்மணி, தனது மகனை உத்திர கன்னடாவில் உள்ள முதலைகள் இருக்கும் ஆற்றில் வீசிவிட்டு வந்துள்ளார். மகனை அவர்கள் கேட்டபோது, ஆற்றில் வீசியதாக கூறியுள்ளார்.
இதன்பின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு சிறுவனின் உடல் சில பாகங்கள் இல்லாமல் மீட்டெடுக்கப்பட்டது. விசாரணையில் பெண்மணி தனது கணவர் தொடர்ச்சியாக மகனையும், தன்னையும் கேலி பேசி வந்ததால் இவ்வாறாக செய்ததாக கூறியுள்ளார்.
தாயின் வாக்குமூலத்தால் கணவருக்கும் சிறை:
இந்த கொலைக்கு தனது கணவரும் பொறுப்பு என வாக்குமூலம் அளித்த காரணத்தால், பெண்ணும் - அவரின் கணவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.