இந்தியா

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக பலாத்காரம் செய்து கைவிட்ட கொடூரம்.. பெண் கண்ணீர் புகார்.!

Summary:

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக பலாத்காரம் செய்து கைவிட்ட கொடூரம்.. பெண் கண்ணீர் புகார்.!

கணவரை பிரிந்து தனியே வசித்து வந்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞன், அவரை கைவிட்டதால் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், இந்திரா நகரில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து, விவாகரத்தும் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், பெண்மணி இந்திரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கும் - உடன் பணியாற்றி வந்த சாகிப் அகமது குரேஷி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னாளில் இவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது. 

இதனால் காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சாகிப் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பரில் இருவரும் பதிவு திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், திருமண நாளை பல்வேறு காரணம் கூறி சாகிப் தள்ளிவைத்து தவிர்த்து வந்துள்ளார். 

மேலும், கடந்த சில மாதமாகவே சாகிப் பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வரவே, ஒருகட்டத்தில் திருமணம் செய்யவும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் தன்னை சாகிப் ஏமாற்றிவிட்டதாக பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர்.


Advertisement