பேருந்து சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன் மகள் பலி; கல்லூரிக்கு செல்லும் போது நடந்த விபத்தால் பரிதாபம்.!Karnataka Bangalore daughter Died infront of Father Accident 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மகள் விசாகா  (வயது 18). தனியார் கல்லூரியில் பி.யு.சி படித்து வந்துள்ளார். தனது மகளை இவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவது வழக்கம். 

நேற்று காலை தனது மகளை அழைத்துக் கொண்டு, இருவரும் காலை 6:30 மணியளவில் கல்லூரி நோக்கி சென்றுள்ளனர் அப்போது, அதே சாலையில் எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து, இவர்களின் மீது மோதியுள்ளது. 

karnataka

இந்த விபத்தில் சதீஷ் மற்றும் விசாகா ஆகியோர் சாலையில் தவறி விழுந்து விடவே, தனியார் பேருந்தின் சக்கரத்தின் சிக்கிய விசாகா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தந்தையின் கண்முன்னே மகளின் உயிர் துடிதுடித்து பலியாகியுள்ளது. மகள் இன்ஜினியரிங் படிக்க விரும்பிய நிலையில், அதற்குள்ளாக அவர் இறந்துவிட்டதாக தாய் மற்றும் தந்தை கூறி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.