கல்லூரி நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்.. பெங்களூரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. மாணவி உட்பட 3 மாணவர்கள் கைது.!

கல்லூரி நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்.. பெங்களூரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. மாணவி உட்பட 3 மாணவர்கள் கைது.!


Karnataka Bangalore College Student 3 Arrested Pakistan Support Dialogue

 

சி.ஏ.ஏ & என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெங்களூரில் கல்லூரி மாணவி பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி சர்ச்சையான நிலையில், மீண்டும் அது தொடர்பான மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், பல்வேறு கல்லூரிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியின்போது பலரும் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து கோஷமெழுப்பி பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த 2 மாணவர்கள், மாணவி திடீரென எழுந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமெழுப்பினர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிற மாணவ - மாணவியர்கள் திகைக்கவே, அவர்களின் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த விஷயம் தொடர்பான வீடியோவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் 3 மாணவர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது. 

வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான காரணத்தால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாகிஸ்தான் ஆதரவு கோஷமெழுப்பிய 3 மாணவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.