இந்தியா

லிப்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. 68 வயது முதியவர் அட்டகாசம்..!

Summary:

லிப்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. 68 வயது முதியவர் அட்டகாசம்..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வர்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 36 வயது பெண்மணி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 36 வயது பெண்மணி என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். 

இவரின் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 22 ஆவது தளத்தில் இருந்த நிலையில், வீட்டிற்கு லிப்ட் உதவியுடன் தினமும் சென்று வந்துள்ளார். இன்று வழக்கம்போல வீட்டிற்கு செல்கையில், லிப்டில் இருந்த முதியவர் பெண்ணுடன் பேச்சுக்கொடுத்துள்ளார். 

15 ஆவது மாடியில் லிப்ட் சென்றுகொண்டு இருக்கும் போது, திடீரென பெண்ணை கட்டிப்பிடித்து, உடல் பாகத்தை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்மணி முதியவரை தள்ளிவிட்டு 22 ஆவது மாடி வந்ததும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். 

கணவரிடம் நடந்ததை கண்ணீருடன் விவரிக்கவே, பெண்ணின் சார்பில் கணவர் வர்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து, சுபோத் குமார் சின்ஹா (வயது 68) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement