கோழிக்கோடு விமான விபத்து! விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே விடப்பட்ட எச்சரிக்கை!

கோழிக்கோடு விமான விபத்து! விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே விடப்பட்ட எச்சரிக்கை!



Karipur Airport unsafe Warning

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 7.40 மணிக்குதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய போது விமானம் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தத்தில் தற்போதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த விமானம் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது அங்கு பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் பள்ளத்தில் விழுந்தது. 

flight accident

இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கோழிக்கோடு விமான விபத்து நடந்த கரிப்பூர் விமானநிலையம் பாதுகாப்பாக இல்லை என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த விமான நிலையம் பாதுகாப்பின்மை குறித்து அவர் 9 வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். மங்களூர் விமான விபத்து நடந்தபின்னர் நான் விடுத்த எச்சரிக்கை கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது என தெரிவித்துள்ளார்.