கண்ணீர் அஞ்சலி.. அதுவும் எதற்கு பார்த்தீங்களா! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த போஸ்டர்!!

கண்ணீர் அஞ்சலி.. அதுவும் எதற்கு பார்த்தீங்களா! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த போஸ்டர்!!


kanneer-anjali-post-for-signal-lamp

பொதுவாக திருமணம், காதணி விழா புதுமனை புகுவிழா, பிறந்தநாள் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டபடுவது வழக்கம். அதேபோல மறைவிற்கும் அஞ்சலி செலுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹைமாஸ் விளக்கு எரியவில்லை என்பதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

புதுவையில் நெல்லித்தோப்பு சிக்னலில் உள்ள ஹைமாஸ் விளக்கு மாதக்கணக்கில் எரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை சரிசெய்ய கோரிக்கை விடுத்து கடந்த வாரம் அனைத்திந்திய இளைஞர் பெரும்மன்றத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அந்த ஹைமாஸ் விளக்கு  கம்பத்தில்  போஸ்டர்  ஒன்றையும் ஒட்டியுள்ளனர்.

Tribute poster

அதாவது மறைவிற்கு அஞ்சலி செலுத்துவது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கண்ணீர் அஞ்சலி என்ற தலைப்பில், புதுச்சேரி அரசே! இந்த ஹைமாஸ் விளக்கு இறந்துவிட்டது. அடக்கம் செய்ய நடவடிக்கை எடு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அந்த போஸ்டர் புகைப்படம் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.