இந்தியா சினிமா

துணை நடிகையை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம்.. திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் கைது..! 

Summary:

துணை நடிகையை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம்.. திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் கைது..! 

கன்னட திரையுலகில் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வருபவர் டி.ஜி ஹர்ஷ்வரதன் என்ற விஜய பார்கவ. இவர் விஷன் 2023 என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். ஹர்ஷ் வர்தனுக்கு பல படங்களில் துணை நடிகையாக நடித்த இளம்பெண் ஒருவருக்கும், கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் அவ்வப்போது தனியே சந்தித்து பேசி, பழகி வந்த நிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய ஹர்ஷ் வரதன், துணை நடிகையுடன் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக துணை நடிகையுடன் ஹர்ஷ் வரதன் பேசாமல் தஹவிர்த்து வரவே, துணை நடிகை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த ஹர்ஷ் வரதன், காதலியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் துணை நடிகை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஹர்ஷ் வரதனை கைது செய்து பரப்பன அஹ்ரகார சிறையில் அடைத்தனர். 


Advertisement